இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களோடு இந்த 2018-ல் அடி எடுத்து வைக்கும் மிதுன ராசி வாசகர்களே, இவ்வாண்டு உங்களுக்கு நடைபெறவிருக்கும் பலன்களை பார்ப்போம். இந்த ஆண்டு 2018-ல் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் எவ்வளவு வந்தாலும் பற்றாக்குறை காணப்படும். குடும்பத்தின் மீது உங்களுக்கு அக்கறை அதிகமாக இருக்கும். குரு பகவான் சஞ்சாரத்தால் குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும். புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். பணம் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். பொது நலனில் நாட்டம் உடையவர்களாக நீங்கள் இருப்பீர்கள். அடுத்தவருக்கு கொடுத்த வாக்குறுதியை எப்படியும் காப்பாற்ற முடியும். நீங்கள் அடிக்கடி ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். தடைகளை தகர்த்தெறிய தெய்வ அனுகூலங்கள் கை கொடுக்கும். நண்பர்கள் உங்களை தேடி வந்து உதவி செய்வர். ஆடம்பர செலவுக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரலாம். தொழில், வியாபாரம் செய்பவர்கள் பல தடைகளை தாண்டி முன்னேற்றம் அடைவார்கள். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். தொழிலில் போட்டி பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் தானாக விலகும். வெளியூர் பயணத்தில் உங்கள் உடமைகளை கவனமாக பார்த்துக்கொள்ளவும். வண்டி, வாகனங்களில் செல்லும் போது மிகுந்த கவனம் தேவை. உத்யோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொண்டால் எதையும் சாதிக்க முடியும். வேலை தேடி அலைபவர்கள் கிடைக்கும் வேலையை தக்கவைத்து கொள்ளவும். உத்யோக உயர்வுக்காக காத்திருப்போர் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டியது அவசியம். உடன் பிறந்தவர்களால் வீண் விரையம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை குறைவு ஏற்படும். மிகவும் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடு வர வாய்ப்புண்டு. நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளில் ஒரு சில தடைகள் இருக்கும். பண வரவை பொறுத்தவரை ஏற்ற இறக்கமாக இருக்கும். வம்பு, வழக்குகளில் இருந்து சற்று ஒதுங்கி இருக்கவும். இந்த 2018 ஆண்டு முழுக்க பொறுமையாக இருந்து செயல்பட்டால் மட்டுமே எந்த பிரச்னையிலும் மாட்டாமல் இருக்க முடியும். தொடர் வேலை காரணமாக உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். டாக்டரின் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் பிரச்சனை இருக்காது. உங்கள் அன்றாட பணிகளில் திறம்பட செயல்படமுடியும். குரு பலத்தால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். தனவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். காதல் கை கூடும். புது வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் மன நிம்மதியுடன் செயல்பட முடியும். குடும்ப தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.வெளியில் கொடுத்த கடன் வட்டியும், முதலுமாக திரும்ப வரும். பண விஷயத்தில் யாருக்கும் எந்த வாக்குறுதியும் தர வேண்டாம். மேலும் யாருக்கும் ஜாமின் கையெழுத்து போட்டு சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். உத்யோகத்தில் ஊதிய உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும். உங்கள் திறமைக்கு ஏற்றவாறு உத்யோகம் அமையும். பணியில் ஒரு சில இடையூறுகள், தடை ஏற்பட வாய்ப்புள்ளது, அதனால் எதிலும் கவனமுடன் இருப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் புது வாய்ப்புகள் உங்களை தேடி வரும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை மாறி லாபம் பெருகும். எல்லாவற்றிற்கும் இறை வழிபாடு ஒன்றே சிறந்த பரிகாரம். பரிகாரம் : இந்த வருடம் முழுவதும் புதன்கிழமையில் பெருமாளுக்கு துளசி சாற்றி வழிபடவும். முக்கிய குறிப்பு : இந்த 2018-ல் மாதம் தோறும் வரும் சந்திராஷ்டம தினத்தில் மட்டும் சிறிது எச்சரிக்கையாக இருக்கவும்.
( For Mithunam : Daily - Weekly - Monthly)
Astrology Predictions Written By :
" Alandur " A .Vinoth Kumar. Ph.D (Astrology).
Mobile : Call +91-9944719963 / Whatsapp +91-9003019831